பதிவு செய்த நாள்
28
மார்
2018
01:03
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, பேட்டராய சுவாமி கோவிலில் நாளை தேரோட்டம் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், புகழ்பெற்ற பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. தேர்த்திருவிழா கடந்த, 18ல் துவங்கியது. அன்று முதல் சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இன்று இரவு, 9:00 மணிக்கு ராமபாணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நாளை (மார்ச் 29) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கர் தலைமையில், 147 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகை பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க, 16 இடங்களில் ’சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. விழாவையொட்டி வரும், 30 ல், பல்லக்கு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.