திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்,செளந்திரநாயகி அம்மன் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இக் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 21 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு சுவாமியும்,அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண விழாவில் நேற்று புஷ்பவனேஸ்வர் பிரியாவிடையுடனும், செளந்திரநாயகி அம்மனுடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .திருத்தேரோட்டம் இன்று காலை 9:45 மணிக்கு நடக்கிறது.