பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
நாமக்கல்: நாமக்கல், காந்திநகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது. காலை, 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், கொடிப்பட பூஜை, ?ஹாமம் மற்றும் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. 28 அடி உயர கொடிமரத்தில், காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு வீதி உலா நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபி?ஷகம், மாலை, 6:30 மணிக்கு முருகன் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் மற்றும் வீதி உலா நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு மகாசங்கல்பம், 10:00 மணிக்கு, 108 சங்கு அபி?ஷகம், மகா தீபாராதனை, 11:30 மணிக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 5:30 மணிக்கு சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை நிர்வாகிகள், பக்தர்கள் செய்கின்றனர்.