பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
சேலம்: சேலம் மண்டலத்தில் இருந்து, 550 கோவில்களின் சொத்து விபரம், அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மதுரை, மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய, சேலம் மண்டலத்தில், அறநிலைய கட்டுப்பாட்டில், 5,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விபரம் சேகரிக்கப்படுகிறது.சேலம் மண்டலம், இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் வரதராசன் கூறியதாவது:மண்டல கோவில்களின் சொத்து விபரம் கண்டறிய, 1,318 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, 550 கோவில்களின் சொத்து விபரம் சேகரிக்கப்பட்டு, சென்னை, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 200 பேர், கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை காலி செய்ய வலியுறுத்தி, நோட்டீஸ் வினியோகிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.