பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
மதுரை: பேரையூர் அருகே வையூர் நல்லமரம் கிராமம் சொக்கம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை (மார்ச் 30) காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:30 மணிக்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு மங்கள இசை, கணபதி, நவகிரக, சுதர்சன, லட்சுமி, ஆயுஷ் ேஹாமங்கள், காலை 9:00 மணிக்கு அம்மன் மூன்று முறை வலம் வந்து கஜமுக யானையால் அம்மனுக்கு தீர்த்தம் தெளித்தல், மாலை 5:00 மணிக்கு முதல் யாக சாலை பூஜை, இரவு 8:00 மணிக்கு தீபாராதனை, சுவாமி பிரதிஷ்டை நடக்கிறது. நாளை காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை 8:45 மணிக்கு தீபாராதனை, காலை 9:00 மணிக்கு கடம் புறப்படுதல், காலை 10:30 மணிக்குள் விநாயகர், சொக்கம்மாள், கருப்பசாமி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைகட்டுக்காரர்கள், கிராம மக்கள் செய்துள்ளனர்.