பெரியகுளம், அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரதேர்விழா மார்ச் 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. தேர் சுற்றி வரும் தெற்குரதவீதியில் சரளைக்கல்போட்டு பல நாட்களாகியும் ரோடு அமைக்கப்படவில்லை. போலீஸ் குடியிருப்பு கட்டுமானப்பணிக்கான கட்டட இடிபாடுகள், தேரை நிலையைச்சுற்றி கொட்டப்பட்டுள்ளது. தேர் எளிதில் செல்ல வசதியாக இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.