நத்தம், நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 18 அன்று துவங்கியது. காலையில் சந்தனக்கருப்பு கோயிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டு, பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். மார்ச் 23 ல் தோரணமரம் ஊன்றப்பட்டது. கடந்த ஞாயிறு அன்று இரவு அம்மன்குளத்தில் கரகம் பாலித்து அம்பாள் அழைத்து வரப்பட்டார். வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. மார்ச் 26 அன்று காலை பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் அம்மன் குளத்தில் இருந்து சந்தனக்குடம் எடுப்பு, அரண்மனை பொங்கல், கிடா வெட்டு மற்றும் ஊர் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவு புராண நாடகத்தை தொடர்ந்து கரகம் அம்மன்குளம் சென்றது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.