பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
புதுச்சேரி : புதுச்சேரி தன்வந்தரி நகர், ஜிப்மர் குடியிருப்பு வளாகம் சஞ்சீவி விநாயகர் கோவிலில், சஞ்சீவி விநாயகர் மற்றும் நுாதன பரிவார கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, காலை 6.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மூலமந்திர், மாலா மந்த்ர ஹோமம், உபசாரங்கள், தீபாராதனை நடந்தது. காலை 9.00 மணிக்கு கடம் புறப்பாடு முடிந்து, 9.30 மணிக்கு அனைத்து விமானங்களுக்கும் ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7.00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து, வீதியுலா நடந்தது. விழாவில், ஜிப்மர் இயக்குனர் மனோஜ் பரிதா, ஜிப்மர் தற்காலிக பொறுப்பு அதிகாரி டாக்டர் அசோக்குமார் பாண்டே, மருத்துவர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.