திருப்பூர் : திருப்பூர் முன்சீப் சீனிவாசபுரம், ராம பஜனை மடத்தில், ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஸ்ரீராமர் பட்டாபிேஷகம் நடந்தது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, ராம விநாயகர் கோவிலில் சிறப்பு அபிேஷகம், ஆராதனை ஆகியன நடந்தன. தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை; ராமாயண சொற்பொழிவு நடைபெற்றது. ராமாயண சொற்பொழிவில், ஸ்ரீராமர் பட்டாபிசேகமும், பஜனை மடத்தில் பட்டாபிேஷக நிகழ்வும் நடந்தன. சுந்தர காண்டம் ஆஞ்சநேய பிரபாவத்துடன் சொற்பொழிவு நடந்தது. கோழியாலயம் பரதன் சுவாமி சொற்பொழி வாற்றினார். வரும், 31ம் தேதி, முத்துக்கிருஷ்ண பாகவதர் குழு நடத்தும் சீதா கல்யாணம் நிகழ்வு நடைபெறவுள்ளது.