பழநி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயில் அருகே இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை மாலை தேரோட்டம் நடக்க உள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச்24 முதல் ஏப்.,2வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக இன்று (மார்ச் 29) இரவு திருவாவினன்குடி கோயில் அருகே மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. நாளை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படும். மாலை 4:30 மணிக்கு கிரிவீதியில் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.