பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
சேலம்: சேலம், அம்மாபேட்டை, குமரகிரி மலையிலுள்ள, தண்டாயுதபாணி கோவில் கட்டடம், மிக பழமையானதாக இருந்தது. நவீன வசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் கூறுகையில், கோவில் திருப்பணி, 2015 செப்டம்பர் முதல் நடக்கிறது. கருவறை, மகா மண்டபம் கட்டுமானப் பணி முடிந்தது. மேற்கூரை, சுற்றுப்புற சுவர் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இரு மாதங்களில் திருப்பணி நிறைவடையும், என்றார்.