புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வருகை தினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2018 12:03
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில், நேற்று 29ம்தேதி, அன்னை வருகை தினம் நடந்தது. புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஆண்டு தோறும் மார்ச் 29ம் தேதி, அன்னை புதுச்சேரி வருகை தந்த தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று, ஆசிரமத்தில் அரவிந்தர் பயன்படுத்திய அறைகள் பக்தர்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. காலை 4:00 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு தியானம் நடந்தது. அன்னை வருகை தினத்தையொட்டி புதுச்சேரி மட்டும் இன்றி, வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்தில் தரிசனம் செய்தனர்.