பதிவு செய்த நாள்
30
மார்
2018
12:03
சென்னை : மச்சக்கார பாலமுருகன் கோவிலில், புதியதாக நிர்மாணிக்கப்பட்ட, ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னதிக்கு, இன்று 30ல் , கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சென்னை, வானகரம் கேட்டுக்குப்பத்தில், மச்சக்கார பாலமுருகன் கோவிலில் அமைந்துள்ளது. அக்கோவிலில், சக்ர விநாயகர், வானதீஸ்வரர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், யோக ஆஞ்சநேயர், சாய் பாபா, விஷ்ணு துர்கை ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில், ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னதி நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 7 அடி உயரத்தில், ஆதிசேஷன் குடையாக நிற்கும் வடிவில் உள்ள பெருமாள் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இன்று 30ல் , 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள், ஆதிசேஷ நாராயண பெருமாள் சன்னதிக்கு, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம், 12:00 மணிக்கு, 108 பால்குட விழா நடைபெற உள்ளது.