பதிவு செய்த நாள்
30
மார்
2018
01:03
பேரூர்: கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த, 27ம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
(மார்ச் 28)ல் காலை, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும், இரவு, 8:00 மணிக்கு வேடுபரி உற்ச வம், குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடந்தன.
காலை, 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது; இரவு, 9:00 மணிக்கு தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளுவிக்கப்பட்டார்; தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். (மார்ச் 30)ல் காலை, யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.