பதிவு செய்த நாள்
04
ஜன
2012
11:01
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 810 ரூபாய் வசூலாகியது. மேலும், பொன் இனமாக 9 கிராம்; வெள்ளி இனமாக 10 கிராமமும் காணிக்கையாக வந்துள்ளது. உடுமலை மாரியம்மன் கோவிலில், நான்கு நிரந்தர உண்டியல்கள் உள்ளன. செப்., மாதத்திற்கு பின்பு மூன்று மாதங்கள் கழித்து, நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், மொத்தம் மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 810 ரூபாயும், பலமாற்றுப்பொன்னினமாக 9 கிராமும், வெள்ளி இனமாக 10 கிராமும் வந்துள்ளன. திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பழனிக்குமார், அறநிலையத்துறை ஆய்வர் புவனேஸ்வரி, மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் சங்கர சுந்தரேசுவரன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. பணியில், திருக்கோவில் பணியாளர்கள், சேவா சங்கத்தினர் பங்கேற்றனர்.