விழுப்புரம் : விழுப்புரம் பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்க 60 ஆயிரம் லட்டு தயாரித்தனர். விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 19 ஆண்டுகளாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் பக்கதர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விழுப்புரம் விஸ்வகர்ம திருமண மண்டபத்தில் 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் ஜோதி தலைமையில் கருணாநிதி, கலியபெருமாள், சித்திரவேல், கோவிந்தன், மணி, துரைக் கண்ணு, நாராயணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.