பதிவு செய்த நாள்
30
மார்
2018
04:03
வேலூர்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர் மகாவீர் கோவிலில் இருந்து, அலங்கரிக் கப்பட்ட மகாவீர் சிலை மற்றும் ரதஊர்வலம், நேற்று (மார்ச் 29) காலை வந்தது. கோவிலில் இருந்து, புறப்பட்ட ஊர்வலம், காந்திரோடு, மெயின் பஜார், லாங்கு பஜார் வழியாக, மீண்டும் கோவிலை சென்றடைந்தது. ஜெயின் சமுதாய கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் : மஹாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஜெயின் சமூகத்தினர், ஊர்வலம் சென்றனர்.
காஞ்சிபுரத்தில், ஜெயின் சங்கம் சார்பில், மஹாவீர் ஜெயந்தி விழா, நேற்று(மார்ச் 29) காலை நடைபெற்றது.பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் இருந்து, ஜெயின் சமூகத்தை சேர்ந்தோர் ஊர்வலமாக புறப்பட்டனர். கிழக்கு ராஜவீதி காமராஜர் சாலை, எண்ணெய்காரத் தெரு வழியாக ரங்கசாமி குளம் அருகே, நிறைவு பெற்றது.ஊர்வலத்தின் போது, புலால் உண்ணக்கூடாது, மது அருந்த கூடாது என, கோஷம் எழுப்பியவாறு சென்றனர். சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின், ஜெயின் சங்கத்தில், மத குரு உபதேசம் நடைபெற்றது.