பதிவு செய்த நாள்
30
மார்
2018
04:03
செம்பாக்கம் : செம்பாக்கம் அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த, வசந்த கால நவராத்திரி விழா நிறைவு.
திருப்போரூர் அடுத்த, செம்பாக்கம் கிராமத்தில், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 17ம் தேதி, வசந்தகால நவராத்திரி விழா துவங்கியது.அம்மனுக்கு, ஒவ்வொரு நாளும், விதவிதமான அலங்காரங்களும், இரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.இறுதி நாளான நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றதுடன், வசந்த கால நவராத்திரி விழா நிறைவு பெற்றது.