Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்த புஷ்கரணியில் உலா வந்த ... பங்குனி உத்திரம் நிறைவு : தங்கரதப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2018
12:04

ஈரோடு: பெரிய மாரியம்மன் வகையறா கோவில் விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் சுமந்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், பங்குனி விழா, வழக்கமான உற்சாகத்துடன், விமர்சையாக நடந்து வருகிறது.

மூன்று கோவில்களிலும் கம்பத்துக்கு, நாள்தோறும் பக்தர்கள், தீர்த்தம் ஊற்றி வழிபடுகின்றனர். சுமை தூக்குவோர் சங்கம், நேதாஜி காய்கறி வியாபாரிகள் சங்கம், நேதாஜி தினசரி மார்கெட் கனி வியாபாரிகள் சங்கம், கனிமார்கெட் ஜவுளி வியாபாரிகள், கே.என்.கே., ரோடு பகுதி மக்கள், கோட்டை பகுதி மக்கள் என, ஆயிரக்கணக்கானோர், காவிரிக்கரையில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து, நேற்று ஊர்வலமாக வந்தனர். கோரிக்கை மற்றும் வேண்டுதல் வைத்த பக்தர்கள், பறவைக்காவடி அலகு, வேல் அலகு, நாவலகு, மயில் அலகு, முதுகு அலகு என அலகு குத்தி வந்தனர். பெண்கள், சிறுவர், சிறுமியர் அக்னிச்சட்டி ஏந்தி, ஆக்ரோஷமாக ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். காவிரி ஆற்றங்கரையில் தொடங்கிய ஊர்வலம், கருங்கல்பாளையம், ஆர்.கே.வி., ரோடு, மணிக்கூண்டு, கனி மார்கெட், பி.எஸ்., பார்க் வழியாக கோவிலில் முடிந்தது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar