பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
01:04
மாமல்லபுரம்: மே 2 வரை, பிரம்மோற்சவ விழா, நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இக்கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63ம் கோவில் இது. நிலம் சார்ந்த பிரச்னைகளுக்கு, பரிகார கோவிலாக புகழ் பெற்றது. இங்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பிற சுவாமிகள் வீற்று, அருள் புரிகின்றனர். கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவை, 22ம் தேதி மாலை, சேனை முதல்வர் புறப்பாடு மற்றும் அங்குரார்ப்பணம்; 23ல், கொடியேற்றம் என, மே 2 வரை, உற்சவங்கள் நடத்த முடிவெடுத்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.