பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
01:04
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: குயிலாப்பாளையம் சிங்கார வேல்முருகன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் சிங்கார வேல்முருகன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு, அபிஷேக ஆராதனை, 6:00 மணிக்கு, வேல் நிறுத்துதல், 6:30 மணிக்கு, காவடி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் செடல் அணிந்து, வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், கஞ்சி வார்த்தல், மாலையில், மிளகாய் துாள் அபிஷேகம் நடந்தது. மாலை 6:15 மணிக்கு, தீ மிதித்தல், இரவு 7:00 மணிக்கு, சாமி வீதியுலா மற்றும் இடும்பன் பூஜைகள் நடந்தது. விழாவில் திரளான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.