ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அடியவர் ஒருவர் அவரிடம், “ஐயா, திருமால் ஏன் பல அவதாரங்கள் எடுத்து உலகை காப்பாற்றவேண்டும்? ஒரே ஒருவராக இருந்து உலகைக் காக்கக் கூடாதா?” எனக் கேட்டார். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அருமையாக பதில் சொன்னார். “நீங்கள் ஒரே ஆள்தானே! எனினும், தாங்கள் உங்கள் தாய்க்கு மகனாகவும், மகனுக்குத் தந்தையாகவும், பாட்டிக்குப் பேரனாகவும், பேரனுக்கு தாத்தாவாகவும், மனைவிக்கு கணவனாகவும் இருக்கவில்லையா? அப்படித்தான் விஷ்ணுவும் அவதாரங்கள் எடுத்தார்” மிக எளிமையான இந்தப் பதிலைக் கேட்டு, அடியவர் மட்டுமின்றி உடனிருந்தவர்களும் உண்மையை உணர்ந்து மகிழ்ந்தனர்.