கருத்து: பரமேஸ்வரன் காசி க்ஷேத்திரத்தில் ஜீவன் சரீரத்தை விடும்போது, வலது காதில் எந்த ராமனுடைய தாரக நாமாவான ராம ராம ராம எனும் நாமத்தை நன்கு உபதேசிக்கிறாரோ.. அப்படிப்பட்ட வரும் சர்வ உத்தமரும், ஜனன -மரண துக்கத்திலிருந்து காப்பவரும், தாரக பிரம்ம ரூபியுமான ராமபிரானை நான் பூஜிக்கிறேன்.
அனுதினமும் ராமனை மனதில் தியானித்து இந்தத் துதியைச் சொல்லி வழிபடும் அன்பர்களுக்குத் தோல்விகள் என்பதே இல்லை. அவர்களின் மனதில் சஞ்சலங்களுக்கு இடமிருக்காது. இல்லத்தில் சகல பீடைகளும் விலகி சம்பத்துக்கள் உண்டாகும். சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகும்.