திருக்கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்யும்போதும், நைவேத்தியம் செய்யும்போதும் சுவாமியைத் தரிசிக்கக் கூடாது. அதேபோல சன்னிதானத்தில் திரைபோட்டிருக்கும்போது திரையை விலக்கிக்கொண்டு தெய்வத்தை பார்ப்பது கூடாது. அதேபோல் இரவில் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்களைச் சொல்வார்கள். அவை: இரவில் வேஷ்டி துவைக்கக் கூடாது, குப்பையை வெளியில் கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. பூமியை கீறுதல், வெட்டுதல், உழுதல் கூடாது. ரகசியம் பேசக் கூடாது.