முனிவர்கள், மகான்கள் மான் தோல், புலித்தோலில் அமர்கிறார்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2018 04:04
அப்படியல்ல. ஒரு காலத்தில் வேட்டையாடுவது என்பது சத்ரிய தர்மம். சத்ரியர்களுக்கு உரித்தான செயல். அப்படி வேட்டையாடிக் கிடைத்த மான் தோலையோ அல்லது இயற்கையாகவே இறந்து போய் அதன் மூலம் கிடைத்த மானின் தோலையோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். பொதுவாக, மான் தோலுக்கும் புலித்தோலுக்கும் வித்தியாசம் உண்டு. மான் தோலானது, ப்ரும்மனோ வத ஏதத் ரூபம் யத் க்ருஷ்ணாஜினம் என்று வேதம் சொல்கிறது. பிரும்ம ஸ்வரூபமாக இருக்கக்கூடிய, க்ருஷ்ணாஜினம் என்று சொல்லக்கூடிய புள்ளி மானைத்தான் சொல்கிறது. அந்த மான் எங்கே இருக்கிறதோ அங்கேதான் தவம் செய்யணும், பூஜை செய்யணும் என்று சாஸ்திரங்கள் விதிக்கின்றது. அதிலேயும் அந்த மான் தோலில் அமர்வதற்கு மூன்று பேருக்குத்தான் உரிமைகளைக் கொடுத்திருக்கிறது. ஒன்று, வேதம் படிக்கக்கூடிய பிரும்மசாரிகள், அடுத்து, ஸோமயாகம் செய்த தீட்சிதர், அடுத்து, பிரும்ம விசாரம் செய்யக்கூடிய சன்யாசிகள், இவர்களுக்குத்தான் உரிமை. சாதாரண தோலில் யார் வேண்டுமானாலும் அமரலாம். இவையெல்லாம் ஜீவஹிம்சை செய்து வரக்கூடியதல்ல. இயற்கையாவே எடுத்துப் பயன்படுத்தக்கூடியவைதான். ஒருக்கால் மாமிசத்தை உண்டு விட்டு மீதம் போடக்கூடிய தோலை அவர்கள் கொடுத்தால் அவற்றைப் பெற்று நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.