கூடலுார்: உரிய நேரத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக அமைதிக்காகவும் கூடலுார் பெரிய பெருமாள்கவுண்டர் தெருவில் உள்ள செல்வகாளியம்மன் கோயிலில் விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜை , ஆராதனை நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.மழை பெய்து, அணைகளில் நீர்மட்டம் உயர வேண்டும் என அன்னதானம் வழங்கினர். மாலையில், பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பக்தர்கள் சுவாமி வேடங்கள் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர்.அப்போது மழை பெய்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.