பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
12:04
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பத்து நாட்கள் நடந்த பிரமோற்சவ விழா நிறைவு பெற்றது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த, 10 நாட்களாக பிரமோற்சவ விழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி தினமும் மாலை, 6:00 மணிக்கு பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்து பந்தல், அனுமந்த வாகனம், கருடவாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு பல்லக்கு சேவை, சந்தன சேவை, சாற்றுமுறை, தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.