பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
12:04
ஆனைமலை;ஆனைமலை, கிழவன்புதுார் முத்து மாரியம்மன் கோவில், 23ம் ஆண்டு விழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருமாங்கல்யம் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று, மதியம், 12:00 மணிக்கு, தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, முத்து மாரியம்னுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை, 4:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு மற்றும் முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்டு விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.