தாரமங்கலம்: தாரமங்கலம் அடுத்த, பாப்பம்பாடி கொண்டக்காரனூரில், வேடனார் வேடச்சி கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று, பாப்பம்பாடி, சந்தைப்பேட்டை பெருமாள் கோவிலிலிருந்து, காவிரி நீரை, தீர்த்தக்குடங்களில் எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.