பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
01:04
கரூர்: கரூர் அருகே, வேட்டமங்கலம் கிராமம் நொய்யலில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தேர்த் திருவிழா நாளை நடக்கிறது. இதற்கான காப்பு கட்டுதல், கடந்த மார்ச், 28ல் நடந்தது. 30ல் திருவிழாவுக்கான ஆயக்கால் போடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, அம்மை அழைத்தல், காலை, 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நாளை இரவு மாவிளக்கு பூஜை, பொங்கல் பூஜை செய்து, இரவு, 12:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் காலை, காப்பு அவிழ்த்தல், இரவு மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. விழாவில், திரளாக கலந்து கொள்ள, விழாக் குழவினர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.