கூடலுார்:தமிழக - கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஏப்.,30ல் நடக்க உள்ள சித்ரா பவுர்ணமி விழா தொடர்பாக தேனி-, இடுக்கி கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் தேக்கடியில் நாளை நடக்கிறது. மங்கலதேவி கண்ணகி கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று விழா கொண்டாடப்படும். தமிழக, கேரள பக்தர்கள் அதிகம் பங்கேற்பர். இக்கோயிலுக்கு கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதை செல்கிறது. இதனால் விழா ஏற்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி கலெக்டர்கள் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். ஏப்., 30 ல் இங்கு சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், இடுக்கி கலெக்டர் கோகுல் தலைமையில், நாளை காலை 11:00 மணிக்கு தேக்கடி ராஜிவ் காந்தி அறிவியல் மையத்தில் நடக்கிறது. இரு மாநில அதிகாரிகள், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கலந்து கொள்கின்றனர்.