நெல்லை டவுனில் ஐயப்ப பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2012 11:01
திருநெல்வேலி:நெல்லை டவுன் மகிழ்வண்ணபுரம் மகரஜோதி ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஐயப்பபக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நெல்லை டவுன் மகிழ்வண்ணபுரம் உப்புதரசு மகரஜோதி ஐயப்ப பக்தர்கள் 36வது ஆண்டு குரு பூஜை விழா மற்றும் 19வது ஆண்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி மங்கள வாத்தியங்கள் முழங்க டவுன் நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.இதனையடுத்து மகிழ்வண்ணபுரம் தங்கம்மன் கோயில் திடலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் குருசாமி சொக்கன்ராஜ் தலைமையில் ஐயப்பபக்தர்கள் கைக்குழந்தையுடனும், 5அடி நீள வேல் குத்தியும், காளி வேடமணிந்தும் ஐயப்ப பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.