வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2018 11:04
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகா குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை விக்னேஷ் பட்டர் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. கோயில் பிரகாரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. விழா நாட்களில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 26 திக்விஜயம், ,27 காலை 9:00 முதல் 10:25 மணிக்குள் திருக்கல்யாணம், 28 மாலை தேரோட்டம் நடக்கிறது.