தலைவாசல்: தலைவாசல், காட்டுக்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 12ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, தீ மிதி விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், குழந்தைகளுடன் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் வீதியுலா வந்தார்.