பதிவு செய்த நாள்
18
ஏப்
2018
03:04
பெத்தநாயக்கன்பாளையம்: சித்திரை திருவிழாவையொட்டி, ஏத்தாப்பூர், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று, தேரோட்டம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு, உற்சவமூர்த்தி மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில், ரதம் ஏற்றப்பட்டார். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். வரும், 20 காலை, 9:30 மணிக்கு குங்கும அர்ச்சனை, 10:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கவுள்ளது.