பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
02:04
கிணத்துக்கடவு;கோதவாடியில், மழை வரம் வேண்டி, பொதுமக்கள் சார்பில், மாரியம்மனுக்கு தீர்த்தக்குட ஊர்வலம் நடத்தது.கிணத்துக்கடவு அருகே, கோதவாடி கிராமம் உள்ளது. இங்குள்ள, 350 ஏக்கர் பரப்புள்ள குளம் பல ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு, இக்குளத்தில் இருந்து, 10 கி.மீ.,துாரமுள்ள போகம்பட்டியில் பெய்த மழையால், குளத்துக்கு சிறதளவு மழை நீர் வந்தது. அதேபோன்று, இந்த ஆண்டும் பலத்த மழை பெய்ய வேண்டும். கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை நீங்க வேண்டும். கால்நடை தீவன தட்டுப்பாடு நீங்க வேண்டும். கோதவாடி குளம் நிறைந்து, விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி, செட்டிக்காபாளையம் ரோட்டில் உள்ள மாலைகோவிலில் இருந்து, ஊருக்குள் இருக்கும் மாரியம்மன் கோவில் வரை பொதுமக்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர். தீர்த்தக்குட ஊர்வலத்தில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.