அச்சிறுப்பாக்கம் : அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், பாலஸ்தாபன விழா இன்று நடைபெறுகிறது. அச்சிறுப்பாக்கத்தில், இளங்கிளி அன்னை உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. தை மாதம், இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பாலாலயம் அமைத்து பாலஸ்தாபனம் செய்யும் விழா இன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று காலை, மங்கள இசையுடன் ஆராதனை நடைபெற்றது. விசேஷ வேள்விகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் திரண்டு, ஆட்சீஸ்வரரை வழிபட்டனர்.