ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியம் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் ஆற்றல் இணைந்தே ஒளி உண்டாகிறது. சக்தி, சிவம் இணைந்தே உயிர்கள் உருவாகின்றன. இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள் தேவி. பாலில் சுவை போலவும், தீயில் சூடு போலவும் கடவுளுடன் இணைந்து இருப்பவள். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக “மீனாட்சி” என்ற பெயரில் அவதரித்து அவரை கணவராக அடைந்தவள். இந்த சக்திகள் இணைவதை “திருக்கல்யாணம்” என்ற பெயரில், திருவிழாவாகக் கொண்டாடு கிறோம்.