எல்லா கோயில்களிலும் வருடத்திற்கு ஒருமுறை விழா நடக்கும். ஆனால் மீனாட்சி கோயிலில் ஆண்டு முழுவதும் விழா நடக்கிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடியில் முளைக் கொட்டு உற்ஸவம், ஆவணியில் பிட்டுத்திருவிழா, கார்த்திகையில் தீபத்திருவிழா, தையில் தெப்பம், மாசியில் மண்டல உற்ஸவம் என்னும் ஆறு விழாக்களுக்கு சுவாமி சன்னதியில் கொடியேற் றுவர். முளைக்கொட்டு விழா, அம்மனுக்கு உரியது என்பதால் மீனாட்சி சன்னதியில் கொடியேற்றுவர். வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி ஊஞ்சல் உற்ஸவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்டம், மார்கழியில் மாணிக்க வாசகர் உற்ஸவம், அம்மனுக்கு எண்ணெய் காப்பு விழா மற்றும் பங்குனி பவித்ரோத்ஸவம் ஆகிய ஆறு விழாக்களுக்கு காப்பு மட்டும் கட்டுவர்.