திருச்சி துவாக்குடி அருகிலுள்ள நெடுங்களம் கீழ்நெடுங்களநாதர் கோயில் மூலஸ்தானத்தில் ஈசனுடன் பார்வதிதேவி அருவமாக இருப்பதாக ஐதிகம். மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பை இங்குதான் காணமுடியும் என்று சொல்கிறார்கள். மேலும், இங்குள்ள உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகையில கட்டை விரல் கிடையாது.