சமயபுரம் அருகில் மகாகாளிகுடியில் உஜ்ஜயினி காளியம்மன் கோயில் உள்ளது. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில்தான் கைகள் இருக்கும். ஆனால், இங்குள்ள ஆனந்த சவுபாக்கிய சுந்தரி அம்மனுக்கு மூன்று கைகள் உள்ளன. இந்த அம்மனை விக்கிரமாதித்தியன் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.