பொதுவாக கிரகண காலத்தில் கோயில்களை மூடிவிடுவர். கிரகணம் முடிந்ததும் பரிகார பூஜை செய்து இறைவனை ஆராதிப்பார்கள். ஆனால் காளஹஸ்தி சிவன்கோயில்களில், கிரகண காலத்திலும் பூஜை நடைபெறுகிறது. இங்கே இறைவனோடு ராகுவின் அம்சமும், இறைவியுடன் கேதுவின் அம்சமும் இணைந்திருப்பதாக பாவிக்கப்படுகிறது. ராகுவும் கேதுவுமே கிரகணத்தை ஏற்படுத்துவதாகப் புராணங்கள் சொல்வதால், இத்தலத்தில் கிரகண தோஷத்தால் பாதிப்பு கிடையாது எனப்படுகிறது. இதனாலேயே கிரகண காலத்திலும் இங்கே பூஜைகள் நடத்தப்படுகிறது!