புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் என்ற கிராமத்தில் வில்லூன்றி ஆற்றங்கரையில் பிரமாண்டமான குதிரைசிலை அமைந்துள்ளது. 1932 ம் ஆண்டில் இந்தச் சிலையை வடிவமைக்க தஞ்சாவூர் அரண்மனை சிற்பிகள் வரவழைக்கப்பட்டனராம். இச்சிலையின் உயரம் எழுபது அடி. நிஜமான குதிரையில் காணப்படும் நரம்புகள், தோல் சுருக்கங்கள் கூட இயல்பாகத் தெரியுமளவு சிலை சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.