காவிரி நதிக்கரையின் தென்பகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள கொடிக் கம்பத்தில் இரண்டு வானரங்கள் சூழ்ந்திருக்க, ராமாயணத்தை பாராயணம் செய்யும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார், வேதயோக ஆஞ்சநேயர். இவரை வழிபட்டால் வாக்கு சாதுர்யம் உண்டாகும் என்கிறார்கள்.