திருச்சி, பீமநகர் பகுதியில் அமைந்துள்ளது வேணு கோபால கிருஷ்ணன் கோயில். ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து மூலவர் பால கிருஷ்ணனுக்கு பால், தயிர் மற்றும் பழச்சாறு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், குழந்தைகளுக்கு ஏற்பட்ட மனபயம் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் நீங்கும் என்பது நம்பிக்கை. கோரிக்கை நிறைவேறியதும் கிருஷ்ணருக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.