ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜருக்கு காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் தனிக்கோயில் அமைந்துள்ளது. ராகுகேது, கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவரது சன்னதியில் சனிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றினால் தோஷங்கள் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.