நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஊரின் மையப்பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள். நித்திய சுமங்கலி மாரியம்மன். அன்னையின் சன்னதிக்கு எதிரேயுள்ளது வேம்பு மரக்கம்பம். இதுவே கொடிமரமாகவும் உள்ளது. பொதுவாக அம்மன் கோயில்களில் கருவறைக்கு எதிரே வேம்புக் கம்பம் ஒன்று நடப்பட்டிருக்கும். இதை சிவரூபம் என்பர். இந்த வேம்புக் கம்பத்தை திருவிழாக் காலங்களில் நட்டு வைத்துவிட்டு, பிறகு 3ம் நாள், 15 ம் நாள் அல்லது 30ம் நாளில் எடுத்துக்கொண்டு போய் நீர் நிலைகளில் சேர்ப்பர். ஆனால் இங்கே வருடம் முழுவதும் வேம்புக் கம்பமாக எழுந்தருளியிருக்கிறார் சிவபெருமான். கணவனை ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருக்கும் அம்பிகை இவள். இதனால் கணவருக்கு ஏதேனும் பிரச்சனை, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அன்னையிடம் வேண்டிக் கொள்ளும் பெண்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களது தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்கிறாளாம், இந்த அம்மன்!