பதிவு செய்த நாள்
27
ஏப்
2018
02:04
திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவில், பிரம்மோற்சவ விழாவையொட்டி, இன்று தேர் திருவிழா நடக்கிறது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை 7:30 மணிக்கு, கணபதி ஹோமமும், சுவாமி மாட வீதியுலாவும் நடந்தது. இதனை தொடர்ந்து 20ம் தேதி முதல், தினந்தோறும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, 1008 பால்குட ஊர்வலம் மற்றும் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பால்குடம் எடுத்தனர். பொய்யாமொழி விநாயக பெருமானுக்கு நேற்று திருப்பூநூல் கல்யாணமும் நடக்கிறது. இன்று காலை 9:00 மணிக்கு திருத்தேர் விழாவும், நாளை மாலை 4:00 மணிக்கு, புனித தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும், 29ம் தேதி இரவு 12:00 மணிக்கு, முத்து பல்லக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.