பதிவு செய்த நாள்
27
ஏப்
2018
02:04
வீரபாண்டி: கரபுரநாதர் கோவில் தேர்த் திருவிழா, கொடியேற்றத்துடன், இன்று துவங்குகிறது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சித்திரை திருவிழா, நேற்று, வாஸ்து பூஜையுடன் துவங்கியது. இன்று காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம்; நாளை மாலை, பெரிய நாயகி - கரபுரநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏப்., 29ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. மதியம், 2:00 மணிக்கு, பெரியநாயகி சமேத கரபுரநாதர் தேரில் எழுந்தருள்வர். மாலை, 5:00 மணிக்கு வாண வேடிக்கையுடன், திரளான பக்தர் கள் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை வலம்வருவர். 30ல், சிறப்பு தரிசனத்தில் கரபுரநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மே, 1 காலை, ஊஞ்சல் உற்சவம்; 2ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் கலைச்செல்வி, கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.