நரசிம்ம ஜெயந்தியான இன்று பானகத்துடன் கதம்பவடை படைத்து வழிபட்டால் பலன் பன்மடங்கு பெருகும்
என்ன தேவை: துவரம் பருப்பு – 200 கிராம் கடலை பருப்பு – 100 கிராம் உளுந்தம் பருப்பு – 50 கிராம் பச்சரிசி – 50 கிராம் மிளகாய் வற்றல் – 7 உப்பு – 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 1/2 லி.,
செய்வது எப்படி: பருப்பு, அரிசியை களைந்து ஊற வைக்கவும். உப்பு, மிளகாய் வற்றலுடன் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் வடை தட்டும் பக்குவத்தில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின் வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் இட்டு பொன் நிறத்தில் பொரித்து எடுக்க சூடான, சுவையான கதம்பவடை தயாராகி விடும்.